செய்திகள் விளையாட்டு

அபார ஆட்டம் ஆடிய இந்தியா; அபார வெற்றி!

இந்தியா மற்றும் மேற்கிந்திய அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ரி-20 போட்டி நேற்று இடம்பெற்றது. இந்தப் போட்டியில் 67 ஓட்டங்களினால் வெற்றி பெற்ற இந்திய அணி 2-1 என்று தொடரையும கைப்பற்றியது.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 240 ஓட்டங்களை அபாரமாக பெற்றுக்கொண்டது.

இதன்போது துடுப்பாட்டத்தில் லோகேஷ் ராகுல் 56 பந்துகளில் 91 ஓட்டங்களையும் ரோஹித் சர்மா 34 பந்துகளில் 71 ஓட்டங்களையும் விராட் கோஹ்லி 29 பந்துகளில் 70 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். மேற்கிந்திய பந்துவீச்சில் சொல்லும்படியாக எவரும் செயற்பட்டிருக்கவில்லை.

இந்நிலையில் 241 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 173 ஓட்டங்களை பெற்று தோல்வி அடைந்தது. இதன்போது அணி சார்பில் கிரன் பொலார்ட் 39 பந்துகளில் 58 ஓட்டங்களையும் சிம்ரோன் ஹெட்மையர் 24 பந்துகளில் 41 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இந்தியாவின் பந்துவீச்சில் மொஹமட் ஷமி, புவனேஸ்வர் குமார், குல்தீப் யாதவ் ஆகியோர் தலா இரு விக்கெட்களை வீழ்த்தினர்.

Related posts

பலமான எதிர்கட்சியாக உருவாகுவோம் – சம்பிக்க

G. Pragas

கொரோனாவிலிருந்து மீண்டார் கனடா பிரதமரின் மனைவி!

Bavan

தூக்கில் தொங்கிய நண்பனை தோள்கொடுத்து மீட்ட சக நண்பன்

G. Pragas