கிழக்கு மாகாணம் செய்திகள் பிரதான செய்தி

அபிவிருத்தி வங்கியில் கைவரிசை காட்டிய திருடர்கள்

திருகோணமலை – சிங்கபுரவில் அமைந்துள்ள சமுர்த்தி வங்கி உடைக்கப்பட்டு அங்கிருந்த உடமைகள் திருடப்பட்டுள்ளன.

வளமையான நடவடிக்கைகளுக்காக வங்கியை இன்று (10) திறக்க வந்தபோது வங்கியின் வாசல் கதவு மற்றும் பின்புற ஜன்னல் கண்ணாடி உடைக்கைப்பட்டிருந்ததை அடுத்து பொலிஸாரிடம் முறையிட்டதாக வங்கி முகாமையாளர் தெரிவித்தார்.

வங்கியில் இருந்த மின்விசிறி மற்றும் வைக்கப்பட்டிருந்த பரிசுப் பொருட்கள் என்பன களவாடப்பட்டதுடன் பணம் வைக்கும் பாதுகாப்புப் பெட்டகமும் சேதப்படுத்தப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.

இதேவேளை, திருகோணமலை 5ம் கட்டைப் பகுதியில் சிறு கடையொன்றும் உடைக்கப்பட்டு களவாடப்பட்டுள்ளதுடன் சிங்கள பாடசாலை ஒன்றிலும் திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரிடம் முறைப்பாடு பதிவாகியுள்ளது.

Related posts

யாழ் பல்கலை துணைவேந்தராக இராணுவ அதிகாரியா? மறுக்கிறது மானியங்கள் ஆணைக்குழு

G. Pragas

இரவு உணவு தாமதமானதால் குடும்பத்திற்கு நேர்ந்த பரிதாபம்!

Tharani

இலங்கை தேசிய உதைபந்தாட்ட அணிக்கு தெரிவாகினார் தேனுசன்

G. Pragas