செய்திகள் வணிகம்

அப்பிளில் இனிமேல் புதிய இயங்குதளம்

அப்பிள் நிறுவனத்தின் ஐ.ஓ. எஸ். இயங்குதளப் பயனாளர்களுக்கு அடுத்து வரவிருக்கும் 13-ம் பதிப்பில் 3டி டச் முறைக்கு பதில் நீண்ட நேரம் அழுத்திப் பிடிக்கும் நடைமுறை மாற்றப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

அப்பிள் நிறுவனம் இந்த நடைமுறையை 2015லேயே அறிமுகம் செய்தது. வந்திருக்கும் செய்திகளின் பட்டியலில் ஒன்றை பார்த்து அதைக் குறியிட்டு வைக்க வேண்டும் எனில் ஒரு பயனாளர் மூன்று முறை தொட வேண்டியிருந்தது. ஆனால் அதற்கு பதில் அச்செய்தியை சில வினாடி தொடர்ந்து அழுத்திப் பிடித்தாலே, அப்பணி முடியும் வகையில் இந்த தொழில்நுட்பம் வடிவமைக்கப்பட்டது.

இந்நிலையில் வரவிருக்கும் ஐபோன், ஐ பேட்களுக்கான புதிய இயங்குதளம் IOS 13 பதிப்பில் இந்த நடைமுறை கொண்டுவரப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

Related posts

முதலிடத்தை பறிகொடுத்தது இந்திய அணி!

G. Pragas

இலங்கையர் ஒருவருக்கு பிரித்தானியாவில் 7 வருட சிறைத் தண்டனை

reka sivalingam

லிபியா தொடர்பான தீர்மானம் மீது இன்று வாக்கெடுப்பு

Tharani