செய்திகள் பிந்திய செய்திகள்

அமெரிக்கப் பயணப் பொதிகள் குறித்து விளக்கம் கேட்கும் விமல்

அமெரிக்க இராணுவ வீரர்கள் சிலர் இந்நாட்டின் பிரதான நட்சத்திர ஹோட்டல் ஒன்றிற்கு கொண்டு வந்த சந்தேகத்திற்கு இடமான பயணப் பொதிகள் தொடர்பில் அமெரிக்க தூதரகம் உடனடியாக தௌிவுபடுத்த வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

நேற்று (06) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்திருந்தார்.

மேலும்,

அண்மையில் அமெரிக்க இராணுவத்தை சேர்ந்த 6 பேர் இந்நாட்டின் பிரதான நட்சத்திர ஹோட்டல் ஒன்றிற்கு வந்திருந்தனர். அவர்களின் பயணப்பொதிகளை சோதனையிட ஹோட்டலின் பாதுகாப்பு அதிகாரிகள் முற்பட்ட போது அதற்கு அவர்கள் அனுமதிக்கவில்லை.

பின்னர், குறித்த பயணப்பொதிகள் அமெரிக்க தூதரகத்தின் வாகனம் ஒன்றில் எடுத்துச் செல்லப்பட்டன. அதனை தொடர்ந்தே குறித்த நபர்கள் 6 பேரும் ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டனர். இது தொடர்பில் அமெரிக்கா தூதரகம் கடந்த தினத்தில் அறிக்கை ஒன்றை வௌியிட்டு சம்பவத்தை ஒப்புக் கொண்டுள்ளது.

எனினும், குறித்த பொதிகளுக்கு என்ன ஆனது? அதனை ஏன் சோதனைக்கு உட்படுத்த சம்மதிக்கவில்லை? அந்த பொதிகளில் என்ன இருந்தது? என்ற கேள்விகளுக்கு பதில் தேவை. இது அதிசயமான அரசாங்கம். இவ்வளவு விடையங்கள் நடந்துள்ள போதும், அரசாங்கம் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெறுவதாக அறிவிப்பு ஒன்றையேனும் விடுக்கவில்லை. – என்றார்.

Related posts

மிளாகாய் தூள் வீசியவர்கள் மீது நடவடிக்கை வேண்டும் – பிமல்

G. Pragas

பசுவை திருடி பெயின்ட் அடித்து விற்க முயன்ற திருடன்!

G. Pragas

மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தால் போக்குவரத்து நெரிசல்

reka sivalingam