உலகச் செய்திகள்செய்திகள்பிரதான செய்தி

அமெ­ரிக்­கா­வின் தாக்­கு­த­லில் அல் குவைதா தலை­வர் ஜவா­ஹிரி உயி­ரி­ழப்பு!

ஆப்­கா­னிஸ்­தா­னில் அமெ­ரிக்கா மேற்­கொண்ட தாக்­கு­ த­லில், அல் குவைதா அமைப்­பின் தலை­வர் அய்­மான் அல்- ஜவா­ஹிரி உயி­ரி­ழந்­தார்.

அல் குவைதா அமைப்­பின் தலை­வர் பின்­லே­டன் 2011ஆம் ஆண்டு பாகிஸ்­தா­னில் பதுங்­கி­யி­ருந்­த­போது அமெ­ரிக்­கப் படை­கள் நடத்­திய சிறப்பு இரா­ணுவ நட­வ­டிக்­கை­யில் கொல்­லப்­பட்­டார்.

பின்­லே­டன் இறந்த பின்­னர் அல் குவைதா அமைப்பை அல் ஜவா­ஹிரி வழி­ந­டத்தி வந்­தார். இவர் ஆப்­கா­னிஸ்­தா­னில் தங்­கி­யி­ருந்து அல் குவை­தாவை வழி­ந­டத்­தி­னார்.

இந்த நிலை­யில் நேற்­று­முன்­தி­னம் பின்­னி­ரவு அமெ­ரிக்கா ஆளில்லா ட்ரோன் மூலம் நடத்­திய சிறப்பு இரா­ணுவ நட­வ­டிக்­கை­யில் அடுத்து அவர் கொல்­லப்­பட்­டார்.

இதை அமெ­ரிக்க அதி­பர் பைடன் நேற்று உறு­திப்­ப­டுத்­தி­னார்.

‘அல் குவைதா தலை­வர் அய்­மான் அல்-­ஜ­வா­ஹிரி காபூ­லில் ஆளில்லா விமா­னம் நடத்­திய தாக்­கு­த­லில் கொல்­லப்­பட்­டார். செப்­ரெம்­பர் 11 தாக்­கு­த­லில் உயி­ரி­ழந்­த­வர்­க­ளின் குடும்­பங்­க­ளுக்கு நீதி வழங்­கப்­பட்­டுள்­ளது.

எவ்­வ­ளவு காலம் சென்­றா­லும், நீங்­கள் எங்கு மறைந்­தி­ருந்­தா­லும், எங்­கள் மக்­க­ளுக்கு நீங்­கள் அச்­சு­றுத்­த­லாக இருந்­தால், அமெ­ரிக்கா உங்­க­ளைக் கண்­டு­பி­டித்­துத் தண்­டிக்­கும்’ என்று பைடன் தெரி­வித்­தார்.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 4,051