செய்திகள் பிந்திய செய்திகள் பிரதான செய்தி

அமெரிக்க விசாரணையாளர்கள் குறித்து பொலிஸ் பேச்சாளர் தகவல்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காகவே அமெரிக்காவின் விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் இலங்கைக்கு வருகை தந்தனர் என்று பொலிஸ் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்தார்.

மேலும், குறித்த நடவடிக்கைகளுக்காக பாதுகாப்பு தரப்பினரின் அனுமதி கிடைத்துள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்கா உள்ளிட்ட மேலும் சில நாடுகளின் விசாரணையாளர்களும், குறித்த விசாரணைகளுக்காக ஒத்துழைப்பு வழங்குவதற்காக இலங்கைக்கு வருகை தந்திருந்தனர் என்றும் காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Related posts

சட்டவிரோமாக நாட்டில் தங்கியிருந்த சுவிஸ் நாட்டவர்கள் கைது!

Tharani

“மனம் விட்டு பேசினால் மனப்பாரம் குறையும்” – விழிப்புணர்வு போராட்டம்!

G. Pragas

உணவகத்தில் இனவாத அறிவிப்பு; வேடிக்கையான விளக்கம்

G. Pragas