in ,

அமெ. கப்பிட்டல் தாக்குதலில் பொலிஸ் அதிகாரி பலி; தாக்குதலாளி சுட்டுக்கொலை!

அமெரிக்கா – கப்பிட்டல் தாக்குதலில் உயிரிழந்த பொலிஸ் அதிகாரிக்கு ஜனாதிபதி ஜோ பைடன் இரங்கல் வெளியிட்டுள்ளார்.

அமெரிக்காவில் நாடாளுமன்றம் அமைந்துள்ள கப்பபிட்டல் கட்டடத்திற்கு வெளியே காரில் வந்த மர்ம நபர் நடத்திய தாக்குதலில் பொலிஸ் அதிகாரியொருவர் உயிரிழந்தார்.

பாதுகாப்பு வளையம் அமைந்த பகுதியில் காரில் வந்த மர்ம நபர் ஒருவர் தடுப்பு பகுதியில் மோதியுள்ளார். இந்த சம்பவத்தில் 2 அதிகாரிகள் காயமடைந்தனர்.

அதனைத்தொடர்ந்து, காரில் இருந்து வெளியே வந்த மர்பநபர், அதிகாரிகளை கத்தியால் குத்தியுள்ளார். இதில் அதிகாரியொருவர் உயிரிழந்தார்.

இதனையடுத்து, குறித்த சந்தேகபர் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இது பயங்கரவாத தாக்குதல் அல்லவென தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனிமொழி எம்பிக்கு கொரோனா!

யாழ். பல்கலையின் வவு. வளாக விடுதி மூடல்!