கிழக்கு மாகாணம் செய்திகள் பிரதான செய்தி

அம்பாறையில் தபால்மூல வாக்களிப்பு மந்த கதியில்

நாடாளுமன்ற தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பின் 2ம் நாள் வாக்களிப்பு அம்பாறை மாவட்டத்தில் பல்வேறு திணைக்களங்களில் இன்று (14) காலை 9 மணி முதல் மும்முரமாக இடம்பெற்று வருகின்றது.

எனினும் சில இடங்களில் மந்தகதியில் இடம்பெற்று வருவதாக சுயாதீன தேர்தல் கண்காணிப்பு உத்தியோகத்தர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதன்படி அம்பாறை மாவட்டத்தில் திருக்கோவில், அக்கரைப்பற்று, பொத்துவில், அட்டாளைச்சேனை, நிந்தவூர், எம்மாந்துறை, காரைதீவு, கல்முனை, நாவிதன்வெளி மற்றும் சாய்ந்தமருது உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரச திணைக்களங்களில் தபால் வாக்களிப்பு மந்தநிலையில் நடைபெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் பரவியது கொரோனா

Tharani

மட்டக்களப்பில் தொடர்ந்து அதிகரிக்கும் டெங்கு நோயாளர்கள்

reka sivalingam

ஒற்றையாட்சி விவகாரம்; சுமந்திரனுக்கு எதிராக முறைப்பாடு

G. Pragas