கிழக்கு மாகாணம் செய்திகள் பிந்திய செய்திகள்

அம்பாறை தமிழர்களின் இருப்பை உறுதிப்படுத்த வேண்டியது கட்டாயம் – சயனொளிபவன்

திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் நான்கு ஆசனங்கள் சிங்கள மக்கள் இடையேயும், இரண்டு ஆசனங்கள் முஸ்லிம் மக்கள் இடையேயும் உறுதிப்படுத்தப்பட்டதன் விளைவாக எஞ்சி இருக்கும் ஒரு ஆசனம் யாருக்கு கிடைக்க போகின்றது என்பதே தற்பொழுது எழுந்துள்ள கேள்வியாகும். பெரும்பாலும் இந்த ஒரு ஆசனத்தை பெற்றுக்கொள்ள போவது அதாவுல்லாவா இல்லை தமிழ் மக்களா என்பதே இங்கு பிரதான கேள்வியாக எழுந்துள்ளது என்று குறித்த தேர்தல் மாவட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் இரா.சயனொளிபவன் தெரிவித்தார்.

நாவிதன்வெளியில் நேற்று (12) இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தில் இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,

“இம்முறை தேர்தலிலே பல தேசிய மற்றும் பேரினவாத கட்சிகளும், அத்தோடு எண்ணிலடங்கா வேட்பாளர்களும் திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் 7 நாடாளுமன்ற ஆசனங்களுக்காக கடுமையான போட்டியில் ஈடுபட்டுள்ளனர். இவற்றில் ஆசனத்தை கைப்பற்ற கூடிய பலம் வாய்ந்த கட்சிகள் என்ற வகையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய மக்கள் சக்தி கட்சி, ஐக்கிய தேசிய கட்சி, எமது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் அதாவுல்லாவின் தேசிய காங்கிரஸ் முன்னிலை வகிக்கின்றது.

தற்பொழுது அம்பாறை மாவட்ட தமிழர்களின் அளிக்கப்படக்கூடிய வாக்குகளாக 95,000 வாக்குகள் கனிக்கப்பட்டுள்ளன. குறிப்பிடப்பட்ட வாக்குகளை பெற்றுக் கொள்வதற்காகவும் தமிழ் பிரநிதித்துத்துவத்தை இழக்க செய்வதற்காகவும் பல தேசிய கட்சிகளும் பல சுயேட்சை குழுக்களும் இத்தேர்தலிலே களமிறக்கப்பட்டுள்ளனர்

கட்சி பேதங்கள், தனிப்பட்ட வெற்றி தோல்விகளுக்கப்பால் அம்பாறை மாவட்டத்திலுள்ள தமிழர்களின் இருப்பை உறுதிப்படுத்தியே ஆக வேண்டிய ஒரு நிர்ப்பந்தத்தில் நாம் இன்று பயணிக்கின்றோம். பெரும்பாலான வேட்பாளர்கள் தேசிய கட்சிகளின் ஆதரவுடன் இம்முறை அம்பாறை மாவட்டத்தின் பிரதிநிதித்துவத்தை இழக்கச் செய்ய வேண்டும் என்ற தீய எண்ணத்துடன் களமிறக்கியுள்ளனர். இதனை நாம் நன்கு உணராவிடின் இந்த அரசியல் காழ்ப்புணர்ச்சி வலையிலே சிக்கி அரசியல் அநாதையாகிவிடுவது மாத்திரமன்றி பிற சமூகத்திடம் கையேந்தி நிற்க வேண்டிய ஒரு இக்கட்டான நிலைக்கு அம்பாறை தமிழர்கள் நாம் புறந்தள்ளப்படுவோம்.” – என்றார்.

Related posts

புகையிரதம் தடம் புரள்வு! மலையக சேவைகள் பாதிப்பு!

Tharani

இன்றைய நாணயமாற்று விகிதம்

Tharani

வில்லிசைக் கலையின் முடிசூடா மன்னர் சின்னமணி

Tharani