in , ,

அம்பாறை- திருக்கோவில் பிரதேசத்தில் கடலரிப்பினால் தென்னைகள் அழிவு!

அம்பாறை- திருக்கோவில் பிரதேசத்தில் கடலரிப்பு காரணமாக பயன்தரும் தென்னை மரங்கள் மற்றும் கடற்கரைப் பிரதேசமும் ஒவ்வொரு நாளும் அழிவடைந்து வருவதாக மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இக் கடலரிப்பு காரணமாக திருக்கோவில் பிரதேசத்தில் தம்பட்டை தொடக்கம் தாண்டியடி, உமிரி வரையான சுமார் 15 கிலோமீற்றர் கரையோர பிரதேசத்தில் உள்ள நுற்றுக்கணக்கான தென்னை மரங்கள் கடலரிப்பினால் அழிவடைந்து வருகின்றன என மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இதேவேளை திருக்கோவில் பிரதேசத்தில் உள்ள ஆழ்கடல் மீனவர்களின் வள்ளங்களை நிறுத்துவதற்கும் மீன்பிடி வலை மற்றும் உபகரணங்களை பாதுகாப்பாக வைப்பதற்குரிய இடமில்லாமலும் தாம் தொடர்ந்து சிரமப்பட்டு வருவதாகவும் மீனவர்கள் கவலை தெரிவித்திருந்தனர்.

இந்த கடலரிப்பின் காரணமாக வரலாற்று சிறப்புமிக்க திருக்கோவில் ஸ்ரீசித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தினை பாதுகாக்கும் வகையில் கரையோர பேணல் திணைக்களத்துடன் இணைந்து திருக்கோவில் பிரதேச சபை கடந்த 2019ல் கல் வேலி அமைத்திருந்தனர்.

குறித்த கல் வேலியை தாண்டியும் திருக்கோவில் ஸ்ரீசித்திரவேலாயுத சுவாமி ஆலயத்துக்கு முன்பாக உள்ள பிரதேசத்தில் மிகப்பெரிய சேதம் ஏற்பட்டு வருவதுடன், இவ்வாறு நிலைமைகள் தொடருமிடத்து கல்வேலியும் கடரிப்பினால் சேதமடையக் கூடும் என அச்சம் வெளியிட்டுள்ளனர்.

வேகமாக பரவும் டெல்ரா திரிபு; 14 பேர் அடையாளம்!

நாட்டில் மேலும் 34 மரணங்கள் பதிவு!