செய்திகள்

அம்பாறை மாவட்ட ஊடகப்பிரிவு அலுவலகம் திறப்பு

அரசாங்கத் தகவல் திணைக்கள அம்பாறை மாவட்ட ஊடகப்பிரிவு அலுவலகம் நாளை (06) திறக்கப்படவுள்ளது.

இதற்கு அமைவாக மாவட்ட ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வும் நாளை  அம்பாறை மாவட்ட செயலகத்தில் இடம்பெறவுள்ளது.

அரசாங்க அதிபர் டி.எம்.எல். பண்டாரநாயக்க தலைமையில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில், அரசாங்கத் தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் நாலக்க கலுவேவ மற்றும் திணைக்கள அதிகாரிகள் கலந்து கொள்ளவுள்ளனர்.

அலுவலகத்திறப்பு விழா மற்றும் ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வில், அரசாங்க அதிபர் டி.எம்.எல்.பண்டாரநாயக்க மாவட்டத்தில் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்கள் தொடர்பில் விளக்கமளிப்பார். அதனையடுத்து அரசாங்கத் தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் நாலக்க கலுவேவ உரையாற்றவுள்ளார்.

உள்ளூர் ஊடகவியலாளர்களின் கடமைகள் மற்றும் பொறுப்புகள், புதிய ஊடகம் தொடர்பாகவும், தேசிய ஊடகங்களில் பிரதேச ஊடகவியலாளர்களின் பங்கு தொடர்பிலும் விளக்கமளிக்கப்படவுள்ளது.

இது தொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களத்தில் பதிவு செய்துள்ள ஊடகவியலாளர்களுக்கு அரசாங்கத் தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.

Related posts

யாழ் பல்கலையில் இன்று பொங்கல் விழா!

reka sivalingam

கால்பந்து தொடரை ஒத்திவைக்க தீர்மானம்!

கதிர்

‘ஈனோரெக் 2020’ தேசிய கண்காட்சி இம்மாதம் ஆரம்பம்

Tharani