கிழக்கு மாகாணம் செய்திகள் பிரதான செய்தி

அம்புலன்ஸ் மோதி இளைஞன் சாவு!

திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதி இருதயபுரம் பகுதியில் இன்று (24) மாலை அம்புலன்ஸ் வண்டி ஒன்றும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் திருகோணமலை – அல்லைநகர் பகுதியைச் சேர்ந்த ஜவாஹிர் முகம்மட் அஹ்ஸான் (25-வயது) என்பவரே உயிரிழந்துள்ளார்.

கிளிவெட்டி பிரதேச வைத்தியசாலையின் அம்புலன்ஸ் வண்டி நோயாளர்களை திருகோணமலை பொது வைத்திய சாலைக்கு கொண்டு சென்று மீண்டும் வைத்தியசாலைக்கு செல்கின்றபோது தோப்பூர் பிரதேசத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் வருகை தந்து கொண்டிருந்த இளைஞர் அம்புலன்ஸ் வண்டியுடன் மோதியதில் இந்த விபத்து சம்பவித்தது.

விபத்துடன் தொடர்புடைய அம்புலன்ஸ் சாரதியை கைது செய்துள்ளதாகவும் விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

மன்னாரில் பொலிஸார் அதிரடி – சிக்கியது 205 கிலோ கஞ்சா!

G. Pragas

தென்கிழக்கு ஆசியாவிற்கு சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

Tharani

நாடுமுழுவதும் மீண்டும் ஊரடங்கு!

G. Pragas