in ,

அயல் வீட்டுக்கு தீ வைத்ததாக இருவர் கைது!

மட்டக்களப்பு – களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிலுள்ள மகிளூர் பிரதேசத்தில் பூட்டியிருந்த வீடொன்று தீப்பற்றி எரிந்து முற்றாக சேதமடைந்துள்ள சம்பவம் தொடர்பில், அவ் வீட்டுக்கு அருகிலுள்ள வீட்டின் உரிமையாளரும் அவரின் மகனும் சந்தேகத்தின் பேரில் நேற்று (7) கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிராம அபிவிருத்தி சங்க கட்டடத்துக்கு அருகிலுள்ள இரு பிள்ளைகள் உட்பட 4 பேர் கொண்ட வீட்டின் உரிமையாளர், தகரத்தால் கட்டப்பட்ட தனது வீட்டை பூட்டிவிட்டு, சம்பவதினமான (06) இரவு உறவினர் வீட்டுக்கு குடும்பத்துடன் தங்குவதற்குச் சென்றுள்ளனர்.

இந்நிலையில், நேற்று அதிகாலை வீட்டுக்கு தீ வைக்கப்பட்டது.

நாட்டு துப்பாக்கிகள், இறைச்சியுடன் ஒருவர் கைது!

உ.சு. நிறுவனம் அனுமதித்த பின்னரே சினோபாம் குறித்து முடிவு!