கிழக்கு மாகாணம் செய்திகள் பிந்திய செய்திகள்

அரசாங்க அதிபரால் 40 கடைத் தொகுதிகள் திறந்து வைப்பு

மட்டக்களப்பு – கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் சிறு முயற்சியாளர்களுக்கான வீதியோ ரவிற்பனை நிலையங்களை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு கடந்த (28) இடம்பெற்றது.

இதன்போது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமாரினால் 40 கடைகள் வட்டவான், மாங்கேனி, பனிச்சங்கேனி, காயங்கேனி போன்ற இடங்களில் திறந்து வைக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சித் திட்டம் அரசாங்க அதிபர் மா.உதயகுமாரின் ஆலோசனையில் கோறளைப்பற்று வடக்கு பிரதேச செயலாளர் எஸ்.ஹரன் அவர்களின் வழிகாட்டலில் வேல்ட்விஷன் லங்கா நிறுவனத்தின் முகாமையாளர் இ.பிரகாஷ்குமாரின் நிதி உதவியுடன் முன்னெடுக்கப்பட்டது. (கு)

Related posts

கோத்தாவிற்கு குடியுரிமை சான்றிதழ் வழங்கியது சட்ட விரோதமானது; நீண்ட விவாதம்

G. Pragas

தொலைபேசி சேவை மூலம் வதந்தி பரப்ப வேண்டாம்!

G. Pragas

கடுவலை பகுதியில் நீர்வெட்டு

reka sivalingam