in ,

அரசின் போக்கை கண்டித்து ஜே.வி.பி தீப்பந்த போராட்டம்!

அரசுக்கு எதிரான கோஷங்களுடன் மக்கள் விடுதலை முன்னணியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் அடங்கிய பிரமுகர்கள் கண்டன தீப்பந்த போராட்டத்தை கல்முனை நகரில் நேற்று (28) இரவு முன்னெடுத்தனர்.

அம்பாறையின் பல்வேறு பிரதேசங்களை சேர்ந்த மக்கள் விடுதலை முன்னணி ஆதரவாளர்கள் பலரும் ஒன்றிணைந்து அரசை கண்டித்த கோஷங்களை எழுப்பியதுடன் இந்த அரசை வீட்டுக்கு விரைவாக அனுப்புவோம் என்ற கோஷத்துடனும் உரத்து குரலெழுப்பினர்.

அரசி விலை உட்பட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, எரிபொருள் விலைகள் உயர்ச்சி, கொள்ளளவு தொடர்பிலும் அமைச்சரவையின் அமைச்சர்களின் போக்குகள் பற்றியும் பல்வேறு கோஷங்களை இங்கு எழுப்பினர்.

இந்த இப்போராட்டத்தின் போது சமூக இடைவெளிகள் பேணப்பட்டு, முகக்கவசங்கள் அணிந்து போக்குவரத்துக்கு எவ்வித இடைஞ்சலும் ஏற்படுத்தாமல் போராட்டத்தை முன்னெடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கரையொதுங்கிய மேலும் ஒரு கடலாமை

பயணத்தடையை மீறி பயணித்த பஸ்- 31 பேர் கைது