தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வேண்டி, இன்று (12) மதியம் மன்னார் – திருக்கேதீஸ்வரம் ஆலயத்தில் விசேட வழிபாடுகள் இடம்பெற்றன.
மன்னார் மாவட்ட பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இணையத்தினரது ஏற்பாட்டில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய குடும்ப உறவுகள் மற்றும் அரசியல் கைதிகளின் உறவுகள் இணைந்து விசேட வழிபாடுகளை மேற்கொண்டனர்.