in ,

அரசியல் கைதிகளுக்காய் வேதசாட்சிகள் ஆலயத்தில் வழிபாடு!

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வேண்டி இன்று (13) மதியம் மன்னார் தோட்டவெளி பகுதியில் அமைந்துள்ள வேதசாட்சிகள் ஆலயத்தில் விசேட வழிபாடுகள் இடம்பெற்றது.

மன்னார் மாவட்ட பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இணையத்தின் ஏற்பாட்டில் அதன் மாவட்ட இணைப்பாளர் எஸ்.திலீபன் தலைமையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய குடும்ப உறவுகள் மற்றும் அரசியல் கைதிகளின் உறவுகள் இணைந்து விசேட வழிபாடுகளை மேற்கொண்டனர்.

இதன்போது திருப்பலியும் ஒப்புக் கொடுக்கப்பட்டது.

நல்லிணக்கத்துக்கு விரோதமாக முகநூலில் எழுதியதாக ஒருவர் கைது!

தூபி அமைப்பதற்கான வேலைத்திட்டம் ஆரம்பிப்பு!