கிளிநொச்சி செய்திகள் பிந்திய செய்திகள்

அரசியல் கைதி சுதாகரன் வீட்டுக்குச் சென்ற தயாசிறி

தமிழ் அரசியல் கைதியான ஆனந்த சுதாகரனின் வீட்டிற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர மற்றும் அங்கஜன் இராமநாதன் எம்பியும் சென்றுள்ளனர்.

கிளிநொச்சியிலுள்ள ஆனந்த சுதாகரனின் இல்லத்திற்கு நேற்று முன் தினம் (12) அவர் சென்றுள்ளார். ஆனந்த சுதாகரனின் இரண்டு பிள்ளைகள் மற்றும் குடும்பத்தினருடன் தயாசிறி கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார்.

இதன்போது பொது மன்னிப்பு வழங்க ஒரு மாதம் எடுக்கும் சிறிசேனவின் பதவிக்காலம் நான்கு நாட்களே இருக்கும் என்று அங்கஜன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கொடூர கொலையாளியான ஜுட் ஜயமஹாவுக்கு பொதுமன்னிப்பு வழங்குவேன் என்று தெரிவித்து ஒரே கிழமையில் அவரை ஜனாதிபதி விடுவித்தார் என்பதும், ஓர் ஆண்டுகள் கடந்தும் ஆனந்த சுதாகரனுக்கு அவர் மன்னிப்பு காட்டவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

வரலாற்றில் இன்று – (17.01.2020)

Tharani

நாளாந்த மின்சார நுகர்வு அதிகரிப்பு

reka sivalingam

எழுக தமிழ் பிரகடணம்

G. Pragas