செய்திகள்

அரசியல் நடவடிக்கைகளில் மீண்டும் சஜித்

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச, நாளை (05) மீண்டும் அரசியல் நடவடிக்கைகளை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளார்.

அதற்கமைய, கொழும்பு 2இல் அமைந்துள்ள புதிய ஜனநாயக முன்னணியின் தேர்தல் நடவடிக்கை அலுவலகத்துக்கு சஜித் பிரேமதாச, இன்று (04) விஜயம் செய்து தனக்கு நெருக்கமானவர்களை சந்திக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், நாளை (05)முதல்,  நாடு முழுவதும் உள்ள விகாரைகளில் சமய வழிபாடுகளில் கலந்துகொள்வதுடன், மக்களை சந்திக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Related posts

விஜய் தான் அடுத்த சூப்பர்ஸ்டார்; முதலில் சொன்ன பிக்பாஸ் பிரபலம்!

Bavan

யாழில் தொடர்கிறது கிருமி அகற்றும் பணி!

G. Pragas

இன்று ஐவர் குணமடைவு; இருவருக்கு கொரோனா!

G. Pragas