in ,

அரசியல், போதைப்பொருள் குறித்த விளம்பரங்களுக்கு தடை

அரசியல், மது, புகையிலை மற்றும் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகள் தொடர்பான விளம்பரங்கள் யூடியூப்பின் முகப்பு பக்கத்தில் இடம்பெறாது என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

விளம்பரங்களின் சங்கமமாக யூடியூப் மாறியதால், பவுடர், சம்போ முதல் ஒன்லைன் கேம் வரையிலான விளம்பரங்களும், அரசியல் கட்சியினரின் விளம்பரங்களும் இடம்பெற்றது. மேலும், புகையிலை, மது வகைகள், மாத்திரைகள் விளம்பரங்களும் இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையில், இதுபோன்ற விளம்பரங்களை முகப்பு பக்கத்தில் இடம்பெறாது என யூடியூப் நிறுவனம் பயனாளர்களுக்கு ஈ –மெயில் மூலம் தெரிவித்துள்ளது. முகப்பு பக்கத்தில் முழு பக்கம் விளம்பரம்படுத்துவதை கடந்த ஆண்டு யூடியூப் நிறுவனம் ரத்து செய்திருந்தது.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட டிரம்பின் விளம்பரங்கள் அதிகளவு யூடியூப் முகப்பு பக்கத்தில் இடம்பெற்றது அரசியல் ரீதியாக சர்ச்சையாக உருவெடுத்தது.

இதனையடுத்து முதல் பக்கத்தில் முழுப்பக்க விளம்பரத்தை அந்நிறுவனம் ரத்து செய்தது. தற்போது யூ டியூப் முகப்பு பக்கத்தில் மேல் பகுதியில் இடம்பெறும் விளம்பரங்களிலும் புதிய கட்டுப்பாட்டைக் கொண்டு வந்துள்ளது. அரசியல் விளம்பரங்கள் சார்பு நிலையை ஏற்படுத்துவதாலும், மது மற்றும் புகையிலை விளம்பரங்கள் யூசர்களை தவறான பாதைக்கு வழி நடத்த வழிவகுக்கும் என்பதாலும் இந்த முடிவை யூ டியூப் நிறுவனம் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், மருந்து கம்பெனிகள், யூடியூப் தளத்தைப் பயன்படுத்தி மருந்துகளை பரிந்துரை செய்யும் விளம்பரங்களை அதிகளவு வெளியிட்டு வருகின்றன. இது மக்களை தவறாகவும், மனக் குழப்பத்துக்கும் வழிநடத்திச் செல்லும் என்பதால் இந்த விளம்பரங்களும் இடம்பெறாது என யூடியூப் நிறுவனம் கூறியுள்ளது.

இது தொடர்பாக யூடியூப் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர், பயனாளர்களின் மின்னஞ்சலுக்கு அனுப்பியுள்ள தகவலில், பயனாளர்கள் மற்றும் விளம்பரதாரர்கள் என இருவரின் நலனையும் கருத்தில் கொண்டு விளம்பரம் தொடர்பாக பல்வேறு வகைகளையும் மறு பரிசீலனை செய்தோம். இது வழக்கமான நடைமுறை. ஏற்கனவே கடந்த ஆண்டு முதல் பக்க விளம்பரத்தை ரத்து செய்திருந்தோம். அதன்தொடர்ச்சியாக முதல் பக்கத்தில் இனி வரும் காலங்களில் புகையிலை, மது வகைகள் மற்றும் அரசியல் விளம்பரங்கள், மருத்துவர்கள் மருந்துகளை பரிந்துரைப்பது போன்ற விளம்பரங்கள் இடம்பெறாது எனக் கூறியுள்ளார்.

பழைமை வாய்ந்த புதிய வகை பல்லி இனம் கண்டுபிடிப்பு

கிணற்றுக்குள் தவறி வீழ்ந்த கர்ப்பிணி பெண் கிணற்றுக்குள்ளேயே குழந்தை பிரசவிப்பு