செய்திகள்பிரதான செய்தி

அரச அலுவலர் ஆடை தொடர்பில் புதிய சுற்றறிக்கை விரைவில்

அரசாங்க ஊழியர்களின் ஆடை தொடர்பில் புதிய சுற்றறிக்கை ஒன்றை வெளியிட பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுத் தீர்மானித்துள்ளது.

இதுதொடர்பில் அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயாதுன்ன தெரிவிக்கையில்,

அரச அலுவலர்கள் அலுவலகத்துக்கு வரும்போது பொருத்தமான அலுவலக உடைகளை அணிவது கட்டாயம்.

இதுதொடர்பான சுற்றறிக்கையைத் தயாரிப்பதற்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

பெண்கள் அலுவலகங்களுக்குச் செல்லும்போது புடவை, ஒசரி அல்லது அலுவலகத்துக்கு ஏற்ற உடை அணியலாம் என்று ஏற்கனவே சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

எனினும் சிலர் சுற்றறிக்கையின் முதல் பகுதியை மாத்திரம் நடைமுறைப்படுத்துகின்றனர்.

எனவே, தகுந்த அலுவலக உடையை அனுமதிக்கவென புதிய சுற்றறிக்கை வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி விரைவில் இந்தச் சுற்றறிக்கை வெளியாகும்– என்றார்.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 4,214