in ,

அரச தரப்பினரால் மாலைதீவின் புதிய தீவுக்கு இலங்கையிலிருந்து மணல் கடத்தல்!

மாலைதீவின் புதிய தீவுக்கு இலங்கையிலிருந்து மணல்!

சாணக்கியன் எம்.பி. தெரிவிப்பு. மாலைதீவில் மற்றுமொரு தீவை உருவாக்குவதற்காக, இலங்கையின் கிழக்கு மாகாணத்திலிருந்து பெருமளவு மணல் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்தார்.
நாடாளுன்றில் நேற்று முன்திம் உரையாற்றிய அவர் இந்தத் தகவலை வெளியிட்டார்.

இந்தக் கடத்தல் செயற்பாட்டில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர் ஒருவரும், சிறிலங்கா பொதுஜன முன்னணியின் உறுப்பினர் ஒருவரும் தொடர்புபட்டுள்ளனர். அத்துடன் கிழக்கு மாகாண ஆளுநரும் இதற்கு ஒத்துழைப்பு வழங்கி வருகின்றார் என்றும் சுட்டிக்காட்டினார்.
இவ்வாறான கடத்தல் செயற்பாடுகளால் இலங்கைக்குக் கிடைக்கவிருந்த பெருமளவு அமெரிக்க டொலர் வருமானம் இல்லாமல் போயுள்ளது.

அரச தரப்பினரே சட்டத்துக்கு முரணான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர் என்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் கவனத்துக்குக் கொண்டு சென்றார்.
சாணக்கியனைத் தொடர்ந்து கருத்து வெளியிட்ட ஆளுங்கட்சியின் பிரதம கொறடாவுமான ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, இது சம்பந்தமாக பதிலளிக்க அவகாசத்தைக் கோரினார்.

நாளாந்தம் வெளியிடப்படும் எண்ணிக்கையை விட அதிகளவான கொரோனாத் தொற்றாளர்கள் காணப்படலாம்!

கருத்தரிப்பதை தாமதியுங்கள்! மருத்துவ வல்லுநர் கோரிக்கை!