செய்திகள் பிரதான செய்தி

அரச பதில் இரசாயன பகுப்பாய்வாளராக கௌரி ரமணா

அரசாங்க இரசாயனப் பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் பதில் அரசாங்க இரசாயனப் பகுப்பாய்வாளராக, மேலதிக அரசாங்க இரசாயனப் பகுப்பாய்வாளர் கெளரி ரமணா நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கான அனுமதியை அமைச்சரவை வழங்கியுள்ளது.

நீதி அமைச்சர் நிமல்சிறிபால டி சில்வா முன்வைத்த அமைச்சரவை பத்திரத்துக்கு அனுமதியளித்தே பதில் அரசாங்க இரசாயனப் பகுப்பாய்வாளராக கெளரி ரமணா நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுவரை அரசாங்க இரசாயனப் பகுப்பாய்வாளராக கடமையாற்றிய ஏ.வெலி அங்க நேற்று (05) 60 வயதைப் பூர்த்தி செய்த நிலையில் ஓய்வுபெற்றார்.

இதனையடுத்தே கெளரி ரமணா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழத்தில் பட்டம் பெற்ற, இலங்கை அறிவியல் சேவை தரம் ஒன்று அதிகாரியாவார்.

Related posts

மஹிந்தவின் உறுப்புரிமை பறிக்கப்பட்டது!

G. Pragas

தமிழ் தேசிய கூட்டமைப்பு இதயசுத்தியுடன் செயற்படவில்லை – அனந்தி

G. Pragas

தமிழ்த் தலைமைகள் குழப்பகரமான நிலையில் உள்ளனர்

G. Pragas