செய்திகள் பிரதான செய்தி

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் விடுக்கும் விசேட அறிவிப்பு!

சுகாதாரத் துறையினால்  விடுக்கப்பட்டுள்ள ஆலோசனைகளை பொதுமக்கள் பின்பற்றுவதற்கு தவறினால்  எதிர்வரும் இரண்டு வாரங்களில் கொவிட்-19  எனப்படும்  கொரோனா வைரஸ் தொற்று நோயாளர்கள் நாட்டில் அதிகரிக்கக்கூடிய சந்தர்ப்பம் காணப்படுவதாக  அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

பொதுமக்கள்  இந்த விடயம் தொடர்பில் பொறுப்பற்ற முறையில் செயற்படுவார்களாயின்  நாட்டில்  கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடியாமல் போகும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் கொரோனா வைரஸ்  தொற்று ஏற்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்ட 99 பேர் சிகிச்சைக்குட்படுத்தப்பட்டுள்ளதுடன்  கொரோனா வைரஸ்  தொற்று சந்தேகத்தின் பேரில்    252 பேர்  நாடளாவிய ரீதியில் உள்ள   வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ரயில் மாேதி முதியவர் உயிரிழப்பு!

reka sivalingam

இன்றைய நாணயமாற்று விகிதம் – 14.02.2020

Tharani

2015 வரை எம தர்மராஜ ஆட்சி நடந்தது; எமதூதுவர் கோத்தா

G. Pragas

Leave a Comment

You have successfully subscribed to the newsletter

There was an error while trying to send your request. Please try again.

NewUthayan will use the information you provide on this form to be in touch with you and to provide updates and marketing.