செய்திகள் பிராதான செய்தி

அரண்மனையில் வாழ மாட்டேன் – சபதமெடுத்தார் சஜித்

நான் பொது மக்களின் அரசை அமைப்பேன். என்னுடைய ஆரம்பத்தை நான் மறக்க மாட்டேன். மக்களுக்கு எனது நன்றியைக் காட்டுவேன் என்று சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இன்று (05) மாலை குருநாகலில் இடம்பெற்ற சஜித் பிரேமதசாவுக்கான பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்தார்.

மேலும்,

நான் வெற்றி பெறும் போது அரண்மனையில் வாழ மாட்டேன். இந்த நாட்டின் இளைஞர்கள் ஒருபோதும் இளவரசர்களின் அடிமைகளாக மாறக் கூடாது.

வாழ்க்கைச் செலவு அதிகரிக்கும் போது குடும்பங்களின் பொருளாதாரத்தை நாம் பலப்படுத்த வேண்டும். சாலைகளை சுத்தம் செய்யும் பணி நாட்டின் போர் வீரர்களுக்கு வழங்கப்படாது. நான் அதிகாலை 4 மணிக்கு எழுந்து இந்நாட்டின் வளர்ச்சிக்காக இரவு 12 மணி வரை வேலை செய்கிறேன்.

கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் கரு ஜயசூரயவின் ஆதரவுடன் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவேன் என்று நம்புகிறேன். எனது கைகள் சுத்தமாக இருக்கின்றது. நான் ஊழல் அல்லது எந்தக் குற்றச் செயலையும் செய்யவில்லை.

அரசியல் அதிகாரம் ஒரு குடும்பத்திற்கு மாத்திரம் உரித்துடையது என்று எவரும் உரிமை பத்திரம் எழுதிக் கொடுக்கவில்லை. குடும்ப ஆட்சியை மீண்டும் உருவாக்கி பலவீனமடைந்துள்ள அரசியல் நிலையினை பலப்படுத்தவே ஒரு தரப்பினர் முயற்சிக்கின்றார்கள். இதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது. – என்றார்.

Related posts

மணியம் தோட்டக் கொலை; தந்தை மகனுக்கு மறியல்

G. Pragas

நான்கு பந்தில் உலக சாதனை படைத்தார் மாலிங்க

G. Pragas

கபே அமைப்பின் இலஞ்ச ஊழல் கருத்தமர்வு இன்று கச்சேரியில் நடந்தது

G. Pragas

Leave a Comment