செய்திகள் பிரதான செய்தி மலையகம்

அரவிந்தகுமார் வெளியிட்ட பாலியல் இலஞ்ச கருத்துக்கு கண்டனம்

கொரோனா நிவாரண நிதியான 5,000 ரூபாயை வழங்குவதற்கு, பாலியல் இலஞ்சம் கோரப்படுகின்றமை தொடர்பாக, பதுளை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமார் தெரிவித்த கருத்துக்கு, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மலையக பெண்களை பிரதநிதித்துவப்படுத்தும் நுவரெலியா மாநகர சபையின் பெண் உறுப்பினர் எஸ்.சிவரஞ்சனி கண்டனம் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக, இன்று (25) அவர் விடுத்துள்ள அறிக்கையில்,

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமாருக்கு வாக்களித்த மலையக பெண்களின் தாய்மைக்குக் கலங்கம் ஏற்படுத்தும் வகையில் இந்தக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது என்றும் 5,000 ரூபாய் கொடுப்பனவு விவகாரத்தில், மலையகப் பெண்களை ஏனைய சமூகங்களுக்கு இடையே தவறான நோக்குதலுக்கு உள்ளாக்கப்படும் அரவிந்தகுமாரின் கருத்தை, எந்தவிதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அவருடைய இந்தக் கருத்துக்கு பகிரங்க மன்னிப்புக் கோரவேண்டும் என்று தெரிவித்துள்ள அவர், அதேபோன்று, 5,000 ரூபாய் விவகாரத்தில், பெண்களை தரக்குறைவாக வழிநடத்திய அதிகாரிகள் இருப்பின், அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க, அரவிந்தகுமாருக்கு, மக்கள் தலைவர் என்ற அதிகாரம் உள்ளது என்றும் அவர் மேலும் கூறினார்.

Related posts

யாழ் சிறுப்பிட்டியில் விபத்து: இருவர் காயம்!

Tharani

ரஷ்யாவிடம் நுட்ப கருவிகளை வாங்குக – ஜனாதிபதியிடம் கோரிக்கை!

G. Pragas

புற்று நோயாளர் பராமரிப்பு நிலையம் திறப்பு

reka sivalingam