செய்திகள்

அரிசி தட்டுப்பாடை ஏற்படுத்த இடமளிக்க வேண்டாம்- விவசாயிகள் கோரிக்கை

அரிசி தட்டுப்பாட்டை ஏற்படுத்த இடைத்தரகர்களுக்கு இடமளிக்க வேண்டாமென பொலன்னறுவை விவசாயிகள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொலன்னறுவை சிறிபுர பிரதேச சபை விளையாட்டரங்கில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களிடம் விவசாயிகள் இந்த கோரிக்கையை முன்வைத்தனர்.

கடந்த போகங்களின் போது அதிக அறுவடை கிடைக்கப்பெற்றுள்ளது. எனவே அரிசி தட்டுப்பாட்டை ஏற்படுத்துவதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிக்கு இடமளிக்கக்கூடாதென விவசாயிகள் தெரிவித்தனர்.

அழிவுக்குள்ளாகியிருந்த அரிசி களஞ்சியங்களை இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் புனர்நிர்மாணம் செய்வதற்கும் நெல்லை முறையாக கொள்வனவு செய்வதற்கும் முறைமையொன்றை தயாரித்ததாகவும் ஜனாதிபதி, விவசாயிகளிடம் தெரிவித்தார்.

எதிர்வரும் காலங்களில் நெற் பயிர்ச் செய்கையில் ஈடுபடும் விவசாயிகளை பாதுகாத்து பிரச்சினைகள் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

Related posts

தந்தை, மகள் உட்பட மூவர் பலியான சோகம்!

G. Pragas

சுமந்திரனை விலக்க முன்னின்று அழுத்தம் கொடுப்போம் – விந்தன்

G. Pragas

காட்டு யானைகளின் அட்டகாசத்தால் வாகனேரி மக்கள் பாதிப்பு

G. Pragas