சினிமா விளையாட்டு

அரையிறுதியில் நடால்

ஐக்கிய அமெரிக்காவின் நியூ யோர்க்கில் இடம்பெற்றுவரும் ஐக்கிய அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு உலகின் இரண்டாம்நிலை வீரரான ரஃபேல் நடால் தகுதிபெற்றுள்ளார்.

இன்று காலை இடம்பெற்ற தனது காலிறுதிப் போட்டியில் ஆர்ஜென்டீனாவின் டியகோ ஸ்வார்ட்ஸ்மானை எதிர்கொண்ட ஸ்பெய்னின் ரஃபேல் நடால், 6-4, 7-5, 6-2 என்ற நேர் செட்களில் ஏறத்தாழ மூன்று மணித்தியாலங்கள் இடம்பெற்ற விறுவிறுப்பான போட்டியில் வென்று அரையிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றிருந்தார்.

நாளை மறுதினம் இடம்பெறவுள்ள அரையிறுதிப் போட்டியில் இத்தாலியின் மட்டியோ பெரெட்டினியை ரபேல் நடால் எதிர்கொள்ளவுள்ளார்.

Related posts

மீண்டும் அயர்ன்மான்

G. Pragas

இந்திய ரி-20 அணி அறிவிப்பு

G. Pragas

அப்துல் காதிர் மரணம்

G. Pragas

Leave a Comment