செய்திகள் யாழ்ப்பாணம்

அறநெறிப் பாடசாலைகளின் கௌரவிப்பு விழா!

தொல்புரம் வழக்கம்பரை அம்பாள் அறக்கட்டளை நிதியம் ஏற்பாடு செய்துள்ள அறநெறிப் பாடசாலைகளின் கௌரவிப்பு விழா நாளை (11) மாலை 3 மணிக்கு இடம்பெறவுள்ளது.

து.ரகு தலைமையில் இடம்பெறவுள்ள இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக சுவாமி சித்மானந்தா, அறநெறிப் பொறுப்பாளர் நாச்சியார் செல்வநாயகம் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

நிகழ்வில் திறமையான 11 மாணவர்களுக்கு மாதாந்தம் 3000 ரூபாய் வீதம் வழங்கலும், அதற்கான உறுதிப் புத்தகம் மற்றும் வவுச்சர் கையளிப்பும் இடம்பெறவுள்ளது.

அத்துடன் அறநெறிப் பாடசாலைகளின் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசில் வழங்கலும் இடம்பெறவிருக்கின்றது.

Related posts

இருதேசத் தீர்வு இலங்கைக்கு அல்ல!

G. Pragas

கொரோனா வைரஸ் தொற்று: மலேசியாவில் 4 பேர் பாதிப்பு!

Tharani

கிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்கள் திருமலையில் போராட்டம்

G. Pragas