செய்திகள் பிரதான செய்தி

அறிவுறுத்தல்களை மீறினால் கைது; ஐசி நடைமுறை சட்டமல்ல

அமுலில் உள்ள ஊரடங்கு சட்டத்தை தளர்த்தும் போது தனிமைப்படுத்தல் வழிகாட்டல்களை பின்பற்றாத நபர்கள் நாளை (28) முதல் கைது செய்யப்படுவார்கள் என்று பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

கொரோனா தொடர்பில் சமூகத்தில் தனிமைப்படுத்தலை பேணும் வகையில் அரசு விடுத்துள்ள முச்சக்கரவண்டியில் பயணிப்போர் எண்ணிக்கை, ஒன்றுகூடுதல் மற்றும் பலரிடையில் நெருக்கமாக இருத்தல் மற்றும் பல அறிவுறுத்தல்களை மீறுவோரே இவ்வாறு கைது செய்யப்படுவார்கள் என தெரிவித்துள்ளார்.

இதேவேளை அடையாள அட்டையின் இறுதி இலக்க நடைமுறை சட்டமல்ல, அறிவுறுத்தல் மட்டுமே. அதனை மீறுவோர் கைது செய்யப்பட மாட்டார்கள். எனினும் உத்தரவுகளை பின்பற்றுங்கள் – என்றும் தெரிவித்தார்.

Related posts

யாழ் நகரை வர்ணமயமாக்க சரா எம்பி நிதியுதவி

கதிர்

நாடாளுமன்ற கூட்டத் தொடர் 1 மணி வரை ஒத்திவைப்பு

reka sivalingam

ஜாஎல உள்ளிட்ட பகுதிகளில் இன்று நீர் வெட்டு

reka sivalingam