செய்திகள் வணிகம்

அலியான்ஸ் விருது விழா

‘அலியான்ஸ் லங்கா’ தனது வருடாந்த விருதுகள் வழங்கும் நிகழ்வை அண்மையில் ஏற்பாடு செய்திருந்தது.

அத்திடியவில் அமைந்துள்ள ‘ஈகிள்ஸ் லேக்சைட்’ நிகழ்வு, மாநாட்டு மண்டபத்தில் இந்த இரவுப் பொழுது நிகழ்வு, மிகவும் கோலாகலமாக நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. சொத்து மற்றும் விபத்துத் துறைகளுக்கான அலியான்ஸ் ஆசிய பசுபிக் பிராந்திய பிரதம நிறைவேற்று அதிகாரியான குளோடியா சேலம், அலியான்ஸ் லங்கா பணிப்பாளரும், பிரதம நிறைவேற்று அதிகாரியுமான கானி சுப்பிரமணியம், அலியான்ஸ் லங்கா நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரமற்ற பணிப்பாளர்களான கலாநிதி ருடிகர் ஸ்கேஃபர், அலன் ஸ்மீ, நந்தன விக்கிரமகே ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

அலியான்ஸ் லங்கா நிறுவனத்தில் நட்சத்திரப் பெறுபேறுகளை வெளிப்படுத்திய ஊழியர்களுக்கு அவர்களுடைய மிகச் சிறந்த பெறுபேறுகள், நிறுவனத்தின் மீதான அர்ப்பணிப்புடனான ஈடுபாட்டுக்காகப் பாராட்டு அளிக்கப்பட்டது.

நான்கு பிரிவுகளிலும் ஒட்டுமொத்தமாக மிகச் சிறந்த பெறுபேறுகளை வெளிப்படுத்தியவர்கள், “Champion of Champions” என்ற மாபெரும் வெற்றிக்கிண்ணங்களைப் பெற்றுக்கொண்டனர். தமது வழக்கமான கடமைகளுக்கும் அப்பாற் சென்று சிறப்பாகச் செயற்பட்டு, நிறுவனத்தின் குறிக்கோள், இலக்கு, விழுமியங்களைத் தக்கவைப்பதற்கு உதவும் வகையில் சாதகமான நடத்தையை ஊக்குவித்தமைக்காக பின்னாதரவுப் பணியாளர்களுக்குப் பணிப்பாளரின் விருது வழங்கப்பட்டது.

மேலும், மில்லியன் டொலர் வட்டமேசைக்கான (MDRT) தகுதியைப் பெற்ற 11 பேருக்கு இந்த மாபெரும் நிகழ்வில், இனங்காணல் அங்கீகாரம் அளிக்கப்பட்டது.

Related posts

சஜித் பிரச்சாரத்தில் புலிகளின் பாடல் – ஒருவர் கைது

G. Pragas

திடீர் வேலை நிறுத்தம் – கோட்டையில் பதற்றம்

G. Pragas

சுமங்கல தேரரின் உண்ணாவிரதம் கைவிடப்பட்டது

G. Pragas

Leave a Comment