கிழக்கு மாகாணம் செய்திகள் பிரதான செய்தி

அல்அமீன் பாடசாலை நுழைவாயில் திறப்பு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மாவட்ட நடாளுமன்ற உறுப்பினர் அலிஸாஹிர் மௌலானாவின் கல்குடாப் பிரதேசத்தினை மையப்படுத்திய அபிவிருத்திப் பணிகளின்படி காவத்தமுனை அல்அமீன் வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட பாடசாலை நுழைவாயிலை திறந்து வைக்கும் நிகழ்வும் சிறுவர் விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வும் இடம்பெற்றது.

பாடசாலை அதிபர் ஏ.ஜி.பிர்தௌஸ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதேச சபை உறுப்பினர் எல்.ஏ.கபூர், ஏறாவூர் நகர சபை உறுப்பினர் எஸ்.எம்.ரியாழ், உயர்பீட உறுப்பினரும், தபாலதிபருமான ஏ.நஸீர் ஹாஜி, கட்சியின் காவத்தமுனை பொறுப்பாளர் எம்.ஐ.ரனீஸ், இணைப்பாளர்களான முன்னாள் அதிபர் எம்.சயீத் மற்றும் ஐ.சபீக், பாடசாலை அபிவிருத்திச் சங்கப் பிரதிநிதிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் எனப்பலரும் கலந்து கொண்டிருந்தனர். (150)

Related posts

கிளி வளாகத்தில் நடந்த சம்பவம் கல்வியின் பின்னடைவு

G. Pragas

10 மில்லியன் டொலர் நிதி உதவி வழங்க காெரியா முடிவு

கதிர்

தமிழ் தேசிய கட்சிகள் கைச்சாத்திட்ட ஆவணம் வெளியானது

G. Pragas

Leave a Comment