in , ,

அல்வாய் சம்பவம் நால்வர் கைது!

பருத்தித்துறை – அல்வாய் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய நால்வரை பருத்தித்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அல்வாய்ப் பகுதியில் நேற்று இடம்பெற்ற வாள்வெட்டில் ஒருவர் கொல்லப்பட்டு, ஐவர் படுகாயமடைந்திருந்தனர்.

இவ் விவகாரத்தில் நால்வர் இன்று பருத்தித்துறைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இருவர் கொலை சந்தேகநபராகவும் மற்றைய இருவர் குழு மோதலில் ஈடுபட்டமை தொடர்பிலான குற்றத்திற்காகவும் கைது செய்யப்பட்டுனர்.

இவர்கள் வாள் வெட்டு மோதலில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் நிலையில், பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

ஜோர்ஜ்யை கொலை செய்த பொலிஸ் அதிகாரியின் குற்றம் நிரூபணம்

மாத்தளனில் உள்ளூர் மீனவர்கள் அறுவர் கைது!!