உலகச் செய்திகள்செய்திகள்

அவதூறு வழக்கு: நடிகர் ஜொனி டீப்புக்கு ஆதரவாகத் தீர்ப்பு

தனது முன்­னாள் மனைவி ஆம்­பர் ஹெர்ட் மீது பிர­பல நடி­கர் ஜொனி டீப் தொடர்ந்த அவ­தூறு வழக்­கில் ஜொனி டெப்­புக்கு ஆத­ர­ வா­கத் தீர்ப்பு வழங்­கப்­பட்­டுள்­ளது.

‘பைரேட்ஸ் ஆஃப் தி கரீ­பி­யன்’ படம் மூலம் பிர­ப­ல­மான ஹொலி­வுட் நடி­கர் ஜொனி டீப்.

தன்­னை­விட 25 வயது குறை­வான அமெ­ரிக்க நடிகை ஆம்­பர் ஹெர்ட் மீது காதல் வயப்­பட்டு 2015-ஆம் ஆண்டு திரு­ம­ணம் செய்­து­கொண்­டார். ஆனால், இவர்­க­ளின் திரு­மண வாழ்க்கை வெகு­நாள்­கள் நீடிக்­க­வில்லை.

2016 ஆம் ஆண்டு ஆம்­பர் ஹெர்ட் , ஜொனி டீப் உடன் இணைந்து வாழ முடி­யாத கார­ணத்­தால் இரு­வ­ரும் பரஸ்­பர விவா­க­ரத்துப் பெற்­ற­னர்.

அதே­வேளை தனது முன்­னாள் கண­வ­ரான ஜொனி டீப் தன்னை பாலி­யல் ரீதி­யில் துன்­பு­றுத்­தி­ய­தா­க­வும், குடும்ப வன் முறைக்கு உள்­ளா­ன­தா­க­வும் வழக்குத் தொடர்ந்த ஆம்­பர் தனக்கு நஷ்­ட­ஈ­டாக 776 கோடி ரூபாய் இழப்­பீடு வழக்­கக்­கோரி வழக்குத் தொடர்ந்­தார்.

இந்­தக் குற்­றச்­சாட்டை மறுத்த ஜானி டீப் தனது முன்­னாள் மனைவி ஆம்­பர் மீது மான­நஷ்­ட­ஈடு வழக்­குத் தொடர்ந்­தார்.

தனது பெயர், புக­ழுக்­குக் களங்­கம் விளைவிக்­கும் வகை­யில் ஆம்­பர் செயற்­ப­டு­வ­தாக இதற்கு இழப்­பீ­டாக 380 கோடி ரூபா நஷ்­ட­ ஈடு வழங்­கக் கோரி­யும் ஆம்­பர் மீது ஜானி டீப் வழக்குத் தொடர்ந்­தார்.

இந்த வழக்­கின் இறுதிக் கட்ட விசா­ரணை கடந்த 2 மாதங்­க­ளாக நடை­பெற்று வந்­தது. பல்­வேறு சாட்­சி­யங்­கள் விசா­ரிக்­கப்­பட்­டன. இந்த இறு­தி­கட்ட விசா­ரணை உலக அள­வில் பேசு­பொ­ரு­ளா­னது.

இந்த நி­லை­யில், இந்த வழக்­கின் தீர்ப்பு நேற்று வெளி­யா­னது.

அதன்­படி, ஜொனி டீப்புக்கு எதி­ராக அவ­தூறு பரப்­பும் நோக்­கத்­து­டன் ஆம்­பர் செயற்­பட்­டது உறு­தி­யா­கி­யுள்­ளது என நீதி­மன்­றம் தெரி­வித்­துள்­ளது.

அத்­தோடு ஜொனி மீது ஆம்­பர் தெரி­வித்த பாலி­யல் குற்­றச்­சாட்­டு­க­ளும் போலி­யா­னவை என நீதி­மன்­றம் தெரி­வித்­தது.

இத­ன­டிப்­ப­டை­யில் அவ­தூறு பரப்­பும் வகை­யில் பொய்­யான குற்­றச்­சாட்­டு­களை முன்­வைத்­தற்­காக ஆம்­பர் தனது முன்­னாள் கண­வர் ஜொனிக்கு இழப்­பீ­டாக 78 கோடி ரூபா­வும் அப­ரா­த­மாக 38 கோடி ரூபா­வு­மாக மொத்­தம் 116 கோடி ரூபா வழங்க வேண்­டும் என நீதி­மன்­றம் அதி­ரடித் தீர்ப்பு வழங்­கி­யுள்­ளது.

இது ஜொனிக்குக் கிடைத்த வெற்­றி­யாக கரு­தப்­ப­டு­கி­றது. ஜொனிக்கு ஆத­ர­வாக தீர்ப்­பு­கள் வெளி­யான நிலை­யில் அவ­ரது ரசி­கர்­கள் சமூ­க­வ­லை­த­ளங்­க­ளில் உற்­சாகக் கருத்­துக்­களைப் பதி­விட்டு வரு­கின்­ற­னர்.

 

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 3,994