செய்திகள் விளையாட்டு

அவுஸ்திரேலியாவின் முன்னாள் வீரருக்கு புற்றுநோய்

அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவர் மைக்கல் கிளார்க் தனக்கு புற்றுநோய் இருப்பதாகவும் அதனை அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றி விட்டதாகவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தகவல் வெளியிட்டுள்ளார்.

38 வயதான மைக்கல் கிளார்க் ஸ்கின் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு இது முதல் முறை கிடையாது. 2006ம் ஆண்டில் தனக்கு தோல் புற்றுநோய் இருந்ததை கண்டறிந்த அவர் தற்போது அறுவைச்சிகிச்சை மூலம் அகற்றினார். அதன் பிறகு அவர் தற்போதும் நெற்றிப் பகுதியில் மீண்டும் தோல் புற்றுநோய் ஏற்பட்டு உள்ளது.

இதனை சிகிச்சையின் மூலம் சரிசெய்து அவர் தற்போது புருவத்திற்கு மேலாக தையல் போடப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டு தனக்கு மீண்டும் புற்றுநோய் ஏற்பட்டதாகவும் அதனை நெற்றியில் இருந்து அகற்றி விட்டதாக பதிவிட்டுள்ளார். வரும் இளம் தலைமுறையினர் வெயிலில் இருந்து தங்களை காத்துக் கொள்ளவும் வேண்டும் என்பதில் மிக அக்கறையாக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

Related posts

வாழைச்சேனையில் ஒருவர் கைது!

Tharani

இராஜாங்க அமைச்சர் கிளிநொச்சி வருகை

Tharani

“எங்களுடைய காணிகளை மீட்டுத் தாருங்கள்”

Tharani

Leave a Comment