செய்திகள்யாழ்ப்பாணம்

ஆசிரியர் அறைந்ததில் மாணவனின் செவிப்பறை பாதிப்பு

ஆசிரியர் அறைந்ததால் செவிப்பறை பாதிப்படைந்து தரம் 10 இல் கல்வி கற்கும் மாணவன் ஒருவன் யாழ்.போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல பாடசாலையிலேயே இந்தச் சம்பவம் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.

மாணவன் மருத்துவபரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் அவரது செவிப்பறை சவ்வு பாதிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் யாழ்.போதனா மருத்துவமனை பொலிஸ் பிரிவுக்கு தகவல் வழங்கியுள்ளது.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 3,994