செய்திகள்

ஆசிரியர் நியமனத்தில் அநீதி – ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு

தேசிய கல்வியல் கல்லூரிக்கான ஆசிரியர் நியமனங்களில் 4 ஆயிரத்திற்கும் அதிகமான நியமினங்கள் ஆட்சேர்ப்பு ஒழுங்கு விதிகளை மீறியே மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.

தேசிய கல்வியல் கல்லூரிக்கு 4,286 டிப்ளோமாதாரிகளுக்கு நியமனங்களை வழங்கும் நிகழ்வு பிரதமர் ரணில் தலைமையில் நேற்று அலரிமாளிகையில் இடம்பெற்றது.

இந்த நிலையில், குறித்த நியமனங்களின் காரணமாக, அதிக இசட் புள்ளிகளைப் பெற்ற மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக இலங் கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

2015 ஆம் ஆண்டு வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம், பிரதேச செயலக மட்டத்தில் அதிக இசட் புள்ளிகளைப் பெற்ற மாணவர்களுக்கு குறித்த நியமனங்கள் வழங்கப்பட்டிருக்க வேண்டும். எனினும், இந்த நடைமுறைக்கு அப்பாற்சென்று நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளது என்று அவர் மேலும் குற்றம் சுமத்தியுள்ளார்.

Related posts

மிலேனியம் ஒப்பந்தத்தை எதிர்த்து தேரர் உண்ணாவிரதம்

G. Pragas

ரவிகரன் உள்ளிட்ட 7 பேரின் வழக்கு ஒத்திவைப்பு

G. Pragas

உணர்வெழுச்சியுடன் நல்லூரில் திலீபனின் நினைவேந்தல்!

G. Pragas

Leave a Comment