செய்திகள் பிரதான செய்தி மன்னார்

ஆசிரியைகளுக்கு அரசியல் கட்சியின் பரிசு; விசாரணை ஆரம்பம்!

மன்னாரில் அரசியல் கட்சி ஒன்று முன்பள்ளி ஆசிரியர்களை அழைத்து பணமும் பரிசுப் பொருட்களும் வழங்கியமை தொடர்பாக மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக மன்னார் உதவித் தேர்தல் ஆணையாளர் ஜெ.ஜெனிற்றன் தெரிவித்தார்.

மன்னார் மாவட்டத்தில் அரசியல் கட்சி ஒன்று கடந்த 17ம் திகதி முன்பள்ளி ஆசிரியர்களை அழைத்து தங்களது பிரச்சார நடவடிக்கையினை மேற்கொண்டமை மற்றும் ஆசிரியர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் பணமும் ஒரு புடவையும் வழங்கியுள்ளதாக மன்னார் தேர்தல் திணைக்களத்திற்கு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளது.

இது தொடர்பிலேயே குறித்த விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Related posts

மனிதர்களே மரங்களை அழிக்கின்றனர் – பிரதேச சபை தவிசாளர்

reka sivalingam

இனவாத தீயில் யாழ் நூலகம் எரிக்கப்பட்ட 39ம் ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிப்பு!

G. Pragas

இனவழிப்பின் புதிய பரிணாமத்தை ஆரம்பித்திருக்கும் கோத்தா: போராட்டத்திற்கு தமிழர் மரபுரிமை பேரவை அழைப்பு

Tharani