in ,

ஆசிரியையை மோதித்தள்ளி தப்பிய டிப்பர் சிக்கியது; சாரதி கைது

பொலிஸார் துரத்திய போது, ஆசிரியை ஒருவரை மோதி தள்ளிவிட்டு தப்பிச்சென்ற டிப்பர் வாகனத்தை எழுதுமட்டுவாழ் பகுதியில் வைத்து நெல்லியடி பொலிஸார் கண்டுபிடித்துள்ளதுடன், அதன் சாரதியையும் கைது செய்துள்ளனர்.

விபத்து சம்பவம் தொடர்பில் பொலிஸார் கரிசனை இல்லாமல் இருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியான பின்னர் நேற்று (24), மூன்று நாட்கள் கடந்த நிலையில் பொலிஸார் டிப்பர் வாகனத்தை மீட்டதுடன், எழுதுமட்டுவாழ் பகுதியை சேர்ந்த அதன் சாரதியையும் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சாரதியையும், டிப்பர் வாகனத்தையும் நெல்லியடி பொலிஸார், பருத்தித்துறை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

வடமராட்சி – திக்கம் பகுதியில் கடந்த 21ம் திகதி மாலை 4 மணியளவில் சப்ரகமுவ மாகாண பதிவில் உள்ள எல்.எம்/5114 எனும் இலக்கமுடைய டிப்பர் வாகனம் பொலிஸாரின் கட்டளையை மீறி சென்ற போது இரண்டு மோட்டார் சைக்கிள்களில் மூன்று பொலிஸார் (இருவர் சீருடை) அதனை துரத்தி சென்றுள்ளனர்.

அதன்போது டிப்பர் சாரதி திக்கம் பகுதியால் தப்பி செல்லும் போது சிறிய வீதி வளைவில் வாகனத்தை திருப்பிய சமயம் எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த ஆசிரியையை மோதி தள்ளியமை குறிப்பிடத்தக்கது.

குச்சவெளியில் சடலம் மீட்பு

மீண்டும் நாட்டை முடக்க முடியாது – ஜனாதிபதி