in ,

ஆசிரியை அடித்ததால் கண்ணில் பாதிப்படைந்த மாணவன்

ஊர்காவற்றுறை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவன் தனக்கு “குட் மோர்னிங்” சொல்லவில்லை என ஆங்கில ஆசிரியை தடியினால் அடித்ததால், மாணவனின் கண் பாதிப்படைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 18ம் திகதி இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக தெரிய வருகிறது.

ஊர்காவற்றுறை பகுதியில் உள்ள பாடசாலையில் சேர்ந்து, அங்குள்ள மாணவர் விடுதியில் தங்கி தரம் 9ல் மாணவ தலைவனாக செயற்பட்டு கற்று வந்த மாணவனே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார்.

ஆசிரியை வந்த போது மாணவன் எழுந்து “குட் மோர்னிங் மிஸ்” என கூறி விட்டு அமர்ந்ததாகவும், அதனை அவதானிக்காத ஆசிரியை தான் வகுப்பு வரும் போது எழுந்து குட் மோர்னிங் சொல்லவில்லை என கூறி தடியினால் மாணவனை அடித்ததாகவும், அதன் போது தடி கண்ணில் பட்டது எனவும் பின்னர் மாணவன் வலியால் துடித்ததாகவும், விடுதி பொறுப்பாளரும் பாடசாலை அதிபருமான பாதிரியாருக்கு தெரியப்படுத்தப்பட்டது எனவும் கூறப்படுகிறது.

அதிபரது கூற்றுப்படி விளையாடும் போது தடி குத்தியதாக தெரிவித்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவனின் கண்ணில் இருந்து சிறு தடி துண்டினை வைத்தியர்கள் எடுத்ததாகவும் கூறப்படுகின்றது.

இது தொடர்பில் அறிந்த மாணவனின் தாயார் மறுநாள் பாடசாலைக்கு சென்று முரண்பட்டு, மகனுக்கு நடந்த சம்பவம் குறித்து தமக்கு தெரியப்படுத்தாதமை தொடர்பில் அதிபருடன் கலந்துரையாடிய போது நடவடிக்கை எடுப்பதாக கூறப்பட்டு, தாயை அனுப்பவிட்டு மாணவனை தாக்கியதாகவும் மாணவனின் தாய் தாெ டர்பில் தகாத வார்த்தை களினால் தூசித்ததாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

தற்போது மாணவன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். வைத்தியசாலை பொலிஸாருக்கு வழங்கப்பட்ட வாக்குமூலம் ஊர்காவற்றுறை பொலிஸாருக்கு மேலதிக விசாரணைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

கோப்பாயில் ஒருவர் கொலை; இரு மகன்கள் உட்பட மூவர் கைது!!

இந்த அறிகுறிகள் காணப்பட்டால் தொடர்பு கொள்க!!