in , ,

ஆண்டான்குளம் கிராம மக்களை அச்சுறுத்தும் வனஜீவராசிகள் திணைக்களம் – ஒருவரை கைது செய்தது!

முல்லைத்தீவு – குமுளமுனை, ஆண்டான்குளம் கிராம மக்களை அவர்களது காணிக்குள் செல்ல வனஜீவராசிகள் திணைக்களம் அச்சுறுத்தல் விடுத்ததுடன், அங்கு குடியேறி வசித்து வந்த ஒருவரை இன்று (26) கைது செய்ததுள்ளனர்.

அத்துடன் பெண் ஒருவரையும் அதிகாரிகள் தாக்க முயன்றுள்ளனர் என்று தெரிய வருகின்றது.

சம்பவம் தொடர்பில் கைதானவர் சார்பில் சட்டத்தரணிகளான ருஜிகா, தனஞ்சயன் உள்ளிட்ட இருவர் ஆஜரான நிலையில் பிணை வழங்கப்பட்டுள்ளது.

1984ம் ஆண்டு வரை எல்லை கிராமமான ஆண்டான்குளத்தில் பல குடும்பங்கள் வாழ்த்து வந்த நிலையில் தற்போது சொந்த கிராமங்களுக்கு செல்லமுடியாத நிலையை அக்கிராம மக்கள் எதிர்கொண்டுள்ளனர்.

இருவேறு விபத்துக்களில் இருவர் சாவு!

கைதான 54 மீனவர்களில் 40 பேர் விடுதலை – 14 பேர் மறியலில்!