செய்திகள் பிரதான செய்தி

ஆதாரங்களுடன் பிடிபட்ட கொலைச் சந்தேக நபர்

கொழும்பு கடலோர பொலிஸ் பிரிவின் ஜம்பட்டாதெருப் பகுதியில் மூன்று மாதங்களுக்கு முதல் நடந்த கொலை தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

08.10.2019 அன்று நபரொருவர் மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்தக் கொலை தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட கொழும்பு குற்றப்பிரிவின் நீண்ட நாள் விசாரணைகளுக்குப் பின்னர் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஒரு துப்பாக்கி, இரண்டு வெடிமருந்துகள் மற்றும் மொபைல் போன் ஆகியவற்றுடன் சந்தேக நபர் ஒருவர் 10.02.2020 அன்று மாலை 5.20 மணியளவில் பெலியகோடாவில் வைத்து கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபரை 72 மணி நேர தடுப்பு உத்தரவின் பேரில் தடுத்து வைத்து கொழும்பு குற்றப்பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

Related posts

சங்காபிஷேகமும் பால்குட பவனியும்

G. Pragas

பாணின் விலை இன்று நள்ளிரவில் இருந்து அதிகரிப்பு

Bavan

கோண்டாவில் ஞானப்பழனி முருகன் ஆலய சிவராத்திரி விழா!

கதிர்

Leave a Comment