செய்திகள் பிந்திய செய்திகள்

ஆன்மீக முகாமில் பறிபோன இரு உயிர்கள்!

அநுராதபுரம் – ஹொரவப்பொத்தானை பகுதியில் ஆன்மீக ஆரோக்கிய முகாம் ஒன்றில் சிகிச்சை பெற சென்ற இருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 18 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஆன்மீக சக்தியில் நோய்களைக் குணப்படுத்துவர் எனச் சொல்லப்படும் நபர் ஒருவரால் நடாத்தப்பட்ட முகாம் ஒன்று நேற்று (07) ஹொரவப்பொத்தானை மத்திய மகா வித்தியாலயத்தின் மைத்தானத்தில் இடம்பெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு நாடு பூராகவும் இருந்து சுமார் 20 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் வருகை தந்துள்ளனர்.

இந்நிலையில், இதில் கலந்து கொண்ட இருவரே உயிரிழந்துள்ளனர். நோய் முற்றிய நிலையில் இருந்தால் அவர்கள் உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

களுத்துறை பிரதேசத்தை சேர்ந்த 39 வயதுடைய தினுஷா டி சில்வா மற்றும் காலி பிரதேசத்தை சேர்ந்த 78 வயதுடைய ஏ.எம்.ரணவக்க என்ற நபர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

மேலும் 18 பேர் ஹொரவப்பொத்தானை பிரதேச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

நளினி உள்ளிட்ட 7 பேரை விடுவித்தால் சர்வதேச அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும்’

Bavan

கோப்பாய் கல்வியல் கல்லூரி விவகாரம்; சித்தர் எதிர்ப்பு!

G. Pragas

என்னை கொல்ல ரஞ்சனை ஏவிவிட்டார் ரணில் – மஹிந்தானந்த

Tharani