in

ஆப்கானில் தலிபான்களின் இடைக்கால அரசாங்கம்!

ஆப்கானில் தலிபான்களின் இடைக்கால அரசாங்கம்! பிரதமாரகிறார் முல்லா ஹசன் அகுந்த்!

ஆப்கானிஸ்தானின் இடைக்கால அரசாங்கத்தை நிறுவுவதாக தலிபான்கள் நேற்று முன் தினம் அறிவித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் தங்களது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்து மூன்று வாரங்கள் கடந்த பின்னரும் ஆட்சியமைப்பதில் தாமதம் ஏற்பட்டிருந்தது. பல்வேறு தரப்புகளுடம் ஆட்சியமைப்பது பற்றி தலிபான்கள் ஆலோசனையில் ஈடுபட்டதாலேயே இவ்வாறு ஆட்சியமைக்கும் நடவடிக்கைகள் தாமதமானதாக் கூறப்பட்டது. இந்த நிலையில் முல்லாஹ் ஹசன் அகுந்த் தலைமையிலான இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர்.

இது தொடர்பில் தலிபான்களின் செய்தித்தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் காபூலில் தெரிவித்தவை வருமாறு=

”ஆப்கானிஸ்தானில் அமையவுள்ள தலிபான்களின் இடைக்கால அரசாங்கத்தில் முல்லாஹ் ஹசன் அகுந்த் பிரதமராகவும், தலிபான்களின் முக்கியமான தலைவர்களில் ஒருவரான முல்லா பரதர், துணைப் பிரதமர்களில் ஒருவராகவும் இருப்பார்.

அத்தோடு வெளியுறவுத் துறை துணைஅமைச்சராக ஷேர் முகம்மது அப்பாஸ் ஸ்டானிக்சாய், உள்துறை அமைச்சராக சிராஜுதீன் ஹக்கானி , பாதுகாப்பு அமைச்சராக முல்லா யாக்கூப் ஆகியோர் பதவியேற்கவுள்ளனர். நாட்டை நிர்வகிப்பதற்கான இடைக்கால ஏற்பாடாக இந்த அமைச்சரவை அமைக்கப்படுகிறது. ஆப்கானிஸ்தானில் தற்போது நடைபெறும் போராட்டங்கள் சட்டவிரோதமானவை. தற்போது ஒரு அரசாங்கம் அமைக்கப்படும் நிலையில், அதனிடம்தான் மக்கள் தங்கள் குறைகளைத் தெரிவிக்க வேண்டும் ” என்றார்.

தலிபான்களின் இடைக்கால அரசாங்கத்தில் பிரதமராகப் பொறுப்பேற்கவுள்ள முல்லாஹ் ஹசன் அகுந்த், பழங்குடியினத்தைச் சேர்ந்தவர். அத்தோடு தலிபான் அமைப்பின் நிறுவுநரான முல்லா ஓமருக்கு மிக நெருக்கமானவராக இருந்தவர். இஸ்லாம் மதத்தின் தீவிரப் பற்றாளரான அகுந்த், பழமைவாத எண்ணங்கள் நிரம்பியவர். தலிபான்களுக்கு ஆலோசனை வழங்கிடும், உயர்மட்ட முடிவுகளை எடுக்கும் மதகுருமார்கள் அடங்கிய சூரா கவுன்சிலில் ஏறக்குறைய 20 ஆண்டுகள் அகுந்த் இருந்தார்.

முல்லா ஓமரின் 1995-2001ஆம் ஆண்டு வரையான ஆட்சியில் தலிபான்களின் வெளியுறவுத்துறை அமைச்சராகவும், துணைப் பிரதமராகவும் முல்லாஹ் அகுந்த் செயற்பட்டுள்ளார். தலிபான் அமைப்பை முல்லா ஓமருடன் சேர்ந்து நிறுவியர்களில் முல்லா ஹசன் அகுந்தும் ஒருவர். தலிபான்களின் ஆட்சியில் 2001 ஆம் ஆண்டு இடம்பெற்ற பார்மியன் புத்தர் சிலை தகர்ப்பின் சூத்திரதாரியும் இதே முல்லா ஹசன் அகுந்த் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

யாழில் கொரோனா ‘போக்குக்’ காட்டுகின்றதாம் சொல்கிறார் மாவட்டச் செயலர்!

தூங்கிய காவலர்கள் தப்பித்தனர் கைதிகள்!