செய்திகள் பிரதான செய்தி

ஆமி சமந்தவை விசாரணை செய்ய அனுமதி!

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுடன் தொடர்புடைய மற்றும் போதைப்பொருள் வர்த்தகரான மாகந்துரே மதூஷ் உடன் தொடர்பை பேணி வந்ததாக தெரிவிக்கப்பட்டு கைது செய்யப்பட்ட ஆமி சமந்தவை தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொள்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

குறித்த சந்தேக நபர் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் அண்மையில் அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டார்.

அதற்கமைய, மினுவங்கொடை நீதிமன்றில் குறித்த நபரை முன்னிலைப்படுத்தியபோதே மேற்குறித்த அனுமதியானது பொலிஸாருக்கு வழ்ங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

குறைநிரப்புப் பிரேரணைக்கு அமைச்சரவை அனுமதி

Tharani

எம் வாழ்வின் ஒரு பகுதியாக கொரோனாவும் இருக்கும்!

G. Pragas

512 கைதிகளுக்கு பொது மன்னிப்பு

Tharani