கிளிநொச்சி செய்திகள் பிரதான செய்தி

ஆயுதம் ஏந்தியதற்கு ஐதேகவே காரணம்! – க.பி.ஜோசப்

யுத்தத்திற்கு வழிகோரியவர்களும் தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தியமைக்கும் காரணமானவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியினரே என்று மக்கள் விடுதலை முன்னணியின் யாழ் மாவட்ட வேட்பாளர் க.பிரான்சிஸ் ஜோசப் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் இன்று (04) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார். மேலும்,

“1977ம் ஆண்டுக்கு பின்னர் நாட்டில் ஐ.தே.க.வின் ஆட்சி நிலவியது. இந்த காலப்பகுதியில் அவசரகால சட்டம் மற்றும் பயங்கரவாத தடை சட்டம் ஆகியவற்றை அமுல்படுத்தி, தமிழ் இளைஞர்களை நசுக்கினர்.

இதனால்தான் தமிழ் இளைஞர்கள், ஆயுதம் ஏந்தும் சூழ்நிலை உருவாகியது. யுத்தமொன்று தோற்றம் பெறுவதற்கு ஐ.தே.க.தான் முக்கிய காரணமாகும்.

இவர்களின் காலத்தில்தான், யாழ்.நூலகம் எரிக்கப்பட்டது. இவ்வாறு தமிழர்களுக்கு எதிராக பல்வேறு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டது. தற்போது நிலைமைகள் மாறியுள்ளப்போதும், பொருளாதாரம் சார்ந்த பிரச்சினைகள் தீர்ந்தபாடில்லை.

கிராமங்களிலுள்ள இளைஞர்கள் சமூக விரோத செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர். இதற்கு காரணம் அவர்கள் எதிர்நோக்கியுள்ள பொருளாதார பிரச்சினையே ஆகும்” – என்றார்.

Related posts

1 இலட்சம் வேலைவாய்ப்பில் வருவாேர் இராணுவத்தின் எடுபிடிகளா?

Tharani

கட்சிச் செயலாளர்களுடன் தேர்தல்கள் ஆணைக்குழு கலந்துரையாடல்

Tharani

காயத்தோடு வந்தவர்கள் சாவகச்சேரி வைத்தியசாலையில் அட்டகாசம்!!

G. Pragas