செய்திகள் பிரதான செய்தி

ஆயுதம் வழங்கியவர்களின் பிள்ளைகளே கருணா பற்றி பிதற்றுகின்றனர் – மஹிந்த

கருணா எனும் வி.முரளிதரன் குறித்து பேசுபவர்கள் கருணாவுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் யார், ஆயுதம் வழங்கியது என்பதை பேச மறுக்கின்றனர் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

குளியாப்பிட்டியவில் நேற்று (24) இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மேலும்,

‘கருணா குறித்துப் பேசுபவர்கள் கருணாவுக்கு யார் ஆயுதம் வழங்கியது என்பதை பேசவில்லை. கருணாவுக்கு யார் ஆயுதம் வழங்கியது, புலிகளுக்கு யார் ஆயுதம் வழங்கியது என்பது உங்களுக்கு நினைவில் இருக்கும். சஜித்தின் தந்தை பிரேமதாசவே ஆயுதங்களை வழங்கினார்.

அந்த ஆயுதங்கள் சிங்கள மக்களை கொலை செய்ய ஆயுதம் வழங்கியது யார்?, இராணுவத்தை சுட ஆயுதம் வழங்கியது யார்? அல்லது வேறு யாரை சுடுவதற்கு ஆயுதம் வழங்கினார்கள். இராணுவத்தை சுடுவதற்கு ஆயுதம் வழங்கியவர்களின் பிள்ளைகளே கருணா கருணா என்று பொய்யாக சத்தமிடுகின்றனர்.

நான் கருணாவின் வரலாற்றை பேசுவதில்லை. அது உங்களுக்கு தெரியும். எந்தக் காலம் என்றும் உங்களுக்கு தெரியும். அவரை யார் முதலில் எடுத்து வந்தது என்பதும் தெரியும்.’ – என்றார்.

மேலும் குறிப்பிடுகையில்,

‘சவால்களை எதிர்கொள்ள முடியாதவர் சிறந்த தலைவராக செயற்பட முடியாது. நாம் ஆட்சி அதிகாரத்தை பெறும்போதெல்லாம் சவால்கள் அதிகரித்ததாகவே இருந்தது. ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் தீர்க்க முடியாத பல பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டோம். தற்போதும் பூகோள மட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தி வெற்றிப் பெற்றுள்ளோம்.’ – என்றார்.

Related posts

நாவாந்துறை முடங்கவில்லை; 3 குடும்பங்களே தனிமைப் படுத்தல்!

Bavan

தந்தையின் குடியால் உயிரை விட்ட மகள்!

G. Pragas

யாழில் 18 கிலாே கஞ்சா மீட்பு; ஒருவர் கைது!

Tharani