in , ,

ஆயுத படைகள் தினத்தில் மியன்மார் இராணுவம் வெறியாட்டம் – 100 பேர் படுகொலை!

மியன்மாரில் தேசிய ஆயுத படைகள் தினமான இன்று (27) மட்டும் சதி மூலம் ஆட்சியை கைப்பற்றிய இராணுவத்திற்கு எதிராக இடம்பெற்று வரும் போராட்டத்தில் போராட்டக்காரர்களில் 100 பேர் வரை படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

ஜனநாயகத்தை பாதுகாப்பதாக ஆளும் இராணுவத்தளபதி மின ஆகுங் ஹ்லைங் உறுதியளித்துள்ள நிலையில், இந்த கொலைகள் தீவிரமாகி வருகின்றன.

ஒரேநாளில் அதிக மக்கள் படுகொலை செய்யப்பட்ட முதல் சந்தர்ப்பம் இதுவாகும், முன்னதாக கடந்த 14ம் திகதி 74 – 90 வரையிலானோர் படுகொலை செய்யப்பட்டனர்.

இன்றைய இந்த ஆயுத படைகள் நாள் பயங்கரவாத மற்றும் அவமானகரமான நாளாக பொறிக்கப்படும் என்று ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

தனியார் காணியிலேயே காடழிப்பு – இடைக்கால அறிக்கை கூறுகிறதாம்!

பாற்பண்ணை கிராமம் முடக்கம்!