செய்திகள் பிரதான செய்தி

ஆரம்ப பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் இனிதே ஆரம்பம்!

நாடளாவிய ரீதியில் கல்வி நடவடிக்கைகள் இன்று(10) முதல் வழமைக்கு திரும்பியுள்ளன. பெருமளவான மாணவர்கள் ஆர்வத்துடன் பாடசாலைகளுக்குச் சென்றமையை காண முடிந்தது. கொவிட் 19 சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி பாடசாலைகள் மீள ஆரம்பித்ததால் மாணவர்களின் வருகையானது அதிகரித்துள்ளதாக அதிபர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

200 மாணவர்களுக்கு குறைந்த எண்ணிக்கையுடைய ஆரம்ப பாடசாலைகளில் சாதாரணமாக ஐந்து நாட்களும் பாடசாலை நடைபெறும் என்பதுடன் 200 மாணவர்களுக்கும் அதிகமுள்ள ஆரம்ப பாடசாலைகளில் ஒவ்வொரு வகுப்புகளாக கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

அந்தவகையில், 5ஆம் தர மாணவர்களுக்கு கிழமையில் ஒவ்வொருநாளும் (சனி, ஞாயிறு தவிர்த்து), 2 ஆம் தர மாணவர்களுக்கு செவ்வாய்க்கிழமைகளில் மட்டும், 3 ஆம் தர மாணவர்களுக்கு புதன்கிழமைகளில் மட்டும், 4 ஆம் தர மாணவர்களுக்கு வியாழன், வெள்ளிக்கிழமைகளில் மட்டும் என கல்வி நடவடிக்கைகள் படிப்படியாக ஆரம்பிக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

யாழ் மாவட்ட வேட்பாளர் மரணம்!

G. Pragas

இன்று மதியம் மழை பெய்யலாம்?

G. Pragas

ஊழியர் நம்பிக்கை நிதிய அங்கத்தவர்களின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில்

Tharani