செய்திகள் பிரதான செய்தி யாழ்ப்பாணம்

ஆரம்ப பிரிவு ஆசிரியர்கள் பாடசாலை செல்ல வேண்டுமா?

வடக்கு மாகாணத்தில் ஆரம்ப பிரிவு ஆசிரியர்கள் பாடசாலைக்கு சமூகமளிக்க வேண்டிய அவசியமில்லை என்று வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் சட்டத்தரணி எல்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் பாடசாலை அதிபர்களின் அறிவுறுத்தல்களுக்கு அமைய செயற்படுமாறு குறிப்பிட்டுள்ளார். மேலும்,

“மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தல் பகுதிகள் தவிர்ந்த ஏனைய இடங்களில் தரம் 6 தொடக்கம் தரம் 13 வரையான மாணவர்களுக்கு நாளை பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன.

இந்நிலையில் தரம் ஒன்று தொடக்கம் தரம் 5 வரையான ஆரம்பப் பாடசாலை ஆசிரியர்கள் (மேல் நிலை பாடசாலைகளுடன் இயங்கும் ஆரம்ப பிரிவுகள் உட்பட) பாடசாலைக்கு சமூகமளிக்க வேண்டியதில்லை என்றும் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

எனினும் ஆரம்ப பிரிவு ஆசிரியர்களுக்கு சிறப்பு விடுப்பாக கணிக்கப்படும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அவர்கள் பாடசாலை அதிபர்களின் அறிவுறுத்தல்களுக்கு அமைய செயற்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

கபாெத(சா/த) பரீட்சை எழுதிய மாணவர்களுக்கு முக்கிய அறிவித்தல்!

Tharani

9 ஆண்டுகளுக்கு பின் விண்வெளி வீரர்களுடன் பயணிக்கவுள்ள விண்கலம்

Tharani

சுகாதார திணைக்கள சாரதிகள் போராட்டம்!

G. Pragas